தமிழ்நாடு

பூண்டி ஏரியில் உயரும் நீர்மட்டம்: உபரி நீர் திறக்க நடவடிக்கை, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

DIN

திருவள்ளூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால், உபரி நீர் வெள்ளிக்கிழமை மாலையில் திறந்துவிடப்படுவதால் கரையோர கிராம பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். இந்த நிலையில் திருவள்ளூர் நிவர் புயலைத் தொடர்ந்து கடந்த 3 நாள்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கான வரத்துக்கால்வாய்களில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி 35 அடி கொண்டதாகும். அதோடு 3231 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும். இந்த மழையால் பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்தும், வரத்துக் கால்வாய் மூலம் 5 ஆயிரம் கன அடிவீதம் நீர்வரத்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே ஏரியின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டு வந்தது.  

இதன் அடிப்படையில் தற்போதைய நிலையில் தொடர் நீர் வரத்தால் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 33 அடியையும் எட்டியதோடு, 2500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து நீர் வரத்தும், மழையும் பெய்தால் அடுத்து வரும் இரண்டு நாள்களில் முழு கொள்ளளவை எட்டுவதற்கான வாய்ப்புள்ளது. தற்போது இந்த ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு 100 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டே இருப்பதால், வெள்ளிக்கிழமை மாலையில் பூண்டி ஏரியிலிருந்து மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பூண்டி ஏரிக்கரையோரம் தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நேரத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட 10 தொகுதிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

மாநில அந்தஸ்து: காங்கிரஸுக்கு அதிமுக கேள்வி

புதுவையின் உரிமையை பெற்றுத் தராமல் ஏமாற்றிய தேசிய, மாநிலக் கட்சிகள்: சீமான் குற்றச்சாட்டு

சாலைப் பணிகளைக் கூட நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு: என்.ரங்கசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT