தமிழ்நாடு

குமுளி கரோனா மருத்துவ முகாம் அகற்றம்:  இடுக்கி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

DIN

கம்பம்: தமிழகம்-கேரளம் எல்லையை இணைக்கும் கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, போடிமெட்டு, சின்னார் சோதனைச் சாவடிகளில் இயங்கி வந்த கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை முதல் அகற்றப்பட்டது.

தமிழகம்-கேரளம் எல்லை இடுக்கி மாவட்டத்தில் குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு, சின்னார் ஆகிய பகுதிகளில் கேரள அரசின் சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கரோனா நோய்த்தடுப்பு பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு முகாம்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து கேரளம் வருபவர்களை சோதனை செய்து வந்தனர்

தற்போது கேரளம் மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் மாநில நிர்வாகம் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இதில், வியாழக்கிழமை முதல் குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு, சின்னார் ஆகிய எல்லை சோதனைச் சாவடிகளில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் மருத்துவ முகாம் ஆவணங்களை சரிபார்த்தல் முகாம்களை அகற்றியது.

வெள்ளிக்கிழமை முதல் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் வழக்கம்போல covid19jagratha.kerala.nic.in என்ற தளத்தில் பதிவு செய்த நகலோடும், சபரிமலை வரும் பக்தர்கள் "வெர்ச்சுவல் க்யூ சிஸ்டம்" மூலம் பதிவு செய்த நகலுடனும் வரவேண்டும். 

அதை பரிசோதிக்கும் பொறுப்பு முகாம் அதிகாரிகளுக்கு பதிலாக முழுக்க முழுக்க போலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் வழக்கம்போல முகாம் இயங்கும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் தெரிவித்தனர்.

இது குறித்து ஏலத்தோட்ட விவசாயி ஜீவரத்தினம் கூறுகையில், எல்லைப் பகுதிகளில் தளர்வுகள் ஏற்படுத்திய இடுக்கி மாவட்ட நிர்வாகம், அதேபோல் பொது போக்குவரத்தை தொடங்கி இரு மாநிலங்களிடையே பேருந்துகளையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT