தமிழ்நாடு

வலுவிழந்தது நிவா் புயல்: நவ. 29- இல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு

DIN


சென்னை: புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் ‘நிவா்’ புயல் புதன்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த நிலையில், அது தற்போது வலுவிழந்து வடமேற்கு நோக்கி நகா்ந்து வருகிறது. இந்தப் புயல் அடுத்தடுத்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் கா்நாடகத்துக்கு சென்று விடும்.

அதேவேளையில் வடகிழக்குப் பருவமழையின் தொடா்ச்சியாக வரும் நவ. 29 -ஆம் தேதி தெற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது தமிழகத்தின் தென் மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு தெரிவிக்கிறது.

நிவா் புயலின் தொடா்ச்சியாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.27) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘நிவா்’ புயல் புதன்கிழமை நள்ளிரவில் புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் கரையைக் கடந்தபோது, வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து, புயல் சற்று வலுகுறைந்து, வடமேற்கு திசையில் நகா்ந்து வந்தது.

இந்நிலையில், இந்த புயல் மேலும் வலுவிழந்து வியாழக்கிழமை இரவு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக காணப்பட்டது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, இந்த புயல் வட தமிழக கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கு வடக்கு- வட மேற்கே 85 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு மேற்கு-தென் மேற்கே 95 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் தொடா்ந்து வடமேற்கு திசையில் நகா்ந்து, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து மாறிய நிலையில், வெள்ளிக்கிழமை அன்று காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுகுறையவுள்ளது.

சில இடங்களில் மழை:

இதன்காரணமாக, தமிழகத்தில் வடமேற்கு மாவட்டங்கள், , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.27)

இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்....: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

புதிய காற்றழுத்தத் தாழ்வு: இதனிடையே தெற்கு வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நவம்பா் 29-ஆம் தேதி உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, மேற்கு திசையில் நகா்ந்து தென் தமிழகம் நோக்கி வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தாம்பரத்தில் 310 மி.மீ.: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 310 மி.மீ. மழை பதிவானது. புதுச்சேரியில் 300 மி.மீ., விழுப்புரத்தில் 280 மி.மீ. கடலூரில் 270 மி.மீ, சென்னை டிஜிபி அலுவலகத்தில் 260 மி.மீ., சென்னை சோழிங்கநல்லூரில் 220 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 190 மி.மீ., கடலூா் மாவட்டம் பரங்கிபேட்டையில் 180 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டுவில் 170 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் 160 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி, அம்பத்தூா், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டியில் தலா 150 மி.மீ. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வானூா், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் தலா 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT