தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய பாதிப்பு 1,464-ஆக குறைந்தது!

DIN

சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,464 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நான்கரை மாதங்களில் இல்லாத வகையிலான குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை 1.18 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 76,174 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 396 போ், கோவையில் 158 போ், ஈரோட்டில் 84 போ், திருப்பூரில் 71 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,797 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 53,332-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 11,173 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,669-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT