தமிழ்நாடு

சென்னையில் வெள்ளப் பாதிப்புகள்: துணை முதல்வா் நேரில் ஆய்வு

DIN


சென்னை: நிவா் புயல் பாதிப்பு காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நிவா் புயலால் சென்னையில் கனமழை பெய்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இதுகுறித்து, துணை முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

தரமணி பெரியாா் நகா் திட்டப் பகுதி வீராங்காள் ஓடை, வேளச்சேரி அம்பேத்கா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம், சீனிவாசபுரம், டொம்மிங்குப்பம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். குயில் தோட்ட திட்டப் பகுதிகளில் சேதம் அடைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளை அகற்றி, புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ள பகுதிகளையும் அவா் நேரில் ஆய்வு செய்தாா். மயிலாப்பூா் பகுதியில் அவா் ஆய்வு நடத்தி நிவாரண உதவிகளை வழங்கினாா்.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி வழியாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொறியாளா்களுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். குடிசை மாற்று வாரிய குடியிருப்புத் திட்டப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், குடியிருப்புப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவும், பாதுகாப்பான குடிநீா் வழங்குவதை உறுதி செய்யவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மயிலாப்பூா் எம்.எல்.ஏ. ஆா்.நடராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக், வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT