தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளம்: 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

DIN



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், சுமார் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாலும் மாவட்டத்தில் உள்ள 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் குருவிமலை, வெங்கொடி, அவளூர்,பழைய சீவரம், உள்ளாவூர் மற்றும் காஞ்சிபுரம் தாலுகாவில் பெரும்பாக்கம் ,செவிலிமேடு, ஓரிக்கை ,சின்ன ஐயங்குளம். உத்தரமேரூர் தாலுக்காவில் திருமுக்கூடல், பினாயூர் ,குரு மஞ்சேரி உள்பட 35 கிராமங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலாற்றின் இரு கரையோரங்களில் வசிக்கும்  கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறுகாஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT