தமிழ்நாடு

வெள்ள உபரி நீர் வெளியேற்றம்: 78 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

பாலாறு, தென்னேரி மற்றும் செய்யாறு ஆகிய ஏரிகளிலிருந்து வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இந்த மூன்று ஏரிக்கரைகளின் வலது, இடது புறமுள்ள 78 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெள்ளிக்கிழமை பொதுப்பணித்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

பாலாற்றுக் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாலாற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், சுமார் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரலாம் என எதிர்பார்ப்பதாலும் ஆற்றின் இரு கரையோரங்களிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வட்டாரத்தில் பிச்சுவாடி, ஆரப்பாக்கம், வெங்கடாபுரம், செவிலிமேடு, ஒரிக்கை, சின்ன ஐயங்குளம் உள்பட 14 கிராமங்கள், வாலாஜாபாத் வட்டத்தில் குருவிமலை, அவளூர், பழையசீவரம், உள்ளாவூர், வாலாஜாபாத், வெங்குடி உள்பட 13 கிராமங்கள், உத்திரமேரூர் வட்டத்தில் திருமுக்கூடல், பினாயூர், சீத்தனஞ்சரி உட்பட 8 கிராமங்களும் சேர்த்து மொத்தம் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்னேரி ஏரிக்கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாகவும், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளதுமான தென்னேரி ஏரி முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. எனவே இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரானது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நீஞ்சல் மடுவு வழியாக செங்கல்பட்டு நகரத்துக்கு அருகில் பாலாற்றில் இணைகிறது. எனவே காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள அகரம், வாரணவாசி, தாழையம்பட்டு, தொள்ளொழி உள்பட 9 கிராமங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் பனையூர், எழிச்சூர், சாஸ்திரம்பாக்கம்,திம்மாவரம்,செங்கல்பட்டு நகர் உள்பட 12 கிராமங்களும் சேர்த்து மொத்தம் 21 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் காவல்துறை மூலமாக போக்குவரத்தும் தடை செய்யப்படுவதாகவும் பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரப்பிரிவு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்யாறு ஏரிக்கரைகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்றில் உள்ள தண்டரை அணைக்கட்டிலிருந்து சுமார் 6 ஆயிரம் கன அடி வெள்ள உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. எனவே செய்யாற்றினை கடந்து செல்லவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம்.செய்யாறு ஆற்றின் இடது கரையோரங்களில் உள்ள பெருநகர்,அனுமன்தண்டலம்,இருமரம்,செம்மரம் உட்பட 12 கிராமங்கள்,வலது கரையோரத்தில் உள்ள மாகரல்,கம்பராஜபுரம்,காவந்தண்டலம் உள்பட 5 கிராமங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உக்கல்,ஆத்தூர்,வயலாத்தூர்,புதுப்பாளையம் உட்பட 5 கிராமங்கள் சேர்த்து மொத்தம் 22 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 35 கிராமங்கள்,தென்னேரிக்கரையோரங்களில் உள்ள 21 கிராமங்கள், செய்யாற்றுக் கரையோரங்களில் உள்ள 22 கிராமங்கள் உட்பட மொத்தம் 78 கிராமத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT