தமிழ்நாடு

கரோனா நோய்த்தொற்று: முதல்வா் பழனிசாமி நாளை ஆலோசனை

DIN

சென்னை: கரோனா நோய்த்தொற்று தொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை (நவ. 28) ஆலோசனை நடத்த உள்ளாா். மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி வழியாகவும், மருத்துவ நிபுணா்களுடனும் தனித்தனியாக அவா் ஆலோசனை நடத்துகிறாா்.

கரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளா்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பைத் தவிா்த்து பெரும்பாலான தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்றின் தன்மையைத் தொடா்ந்து, டிசம்பா் மாதத்தில் எத்தகைய தளா்வுகளை அளிப்பது என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவ நிபுணா் குழுவுடனும் அவா் ஆலோசிக்கவுள்ளாா். இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து பல்வேறு தளா்வுகள் அடங்கிய அறிவிப்புகளை முதல்வா் பழனிசாமி வெளியிட உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT