தமிழ்நாடு

நெல்லையில் தொழிற்சங்கத்தினர் மறியல்: 350 பேர் கைது

26th Nov 2020 03:02 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 350 பேரை காவலர்கள் கைது செய்தனர். 

வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் கரோனா நிவாரணமாக மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். உணவுப் பொருள்களை ரேஷன் மூலம் இலவசமாக வழங்க வேண்டும். வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டம்-2020 ஐ திரும்பப் பெற வேண்டும்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும். ஒரு நாள் கூலியாக ரூ.500 வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதையொட்டி திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அனைத்துத் தொழிற்சங்கத்தினரின் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தொமுச தர்மன், சிஐடியு மோகன், ஏஐடியுசி காசிவிஸ்வநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஹெச்.எம்.எஸ். சுப்பிரமணியன், ஐஎன்டியுசி கண்மன், ஏஐசிசிடியு சங்கரபாண்டியன், டிடிஎஸ்எப் சந்தானம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

தொடர்ந்து சாலை மறியலுக்கு முயன்றவர்களை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட மொத்தம் 350 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தினர்.

Tags : protest Nellai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT