தமிழ்நாடு

சேலத்தில் புயலால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

DIN

நிவர் புயலால் சேலத்தில் பலத்த காற்று வீசியதால் கன்னங்குறிச்சி பகுதியில் நெற்பயிர்கள் சரிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

சென்னை மற்றும்  கடலூர், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் நிவர் புயல் தாக்கியதால் சேதம் ஏற்பட்டுள்ளது .


நிவர் புயலால் வியாழக்கிழமை சேலம் ஏற்காடு செல்லும் சாலையை சாரல் மழையில் மூடி மறைத்துள்ள மேகங்கள். 

இங்கு அதிகாரிகள் குழுவினர் சென்று மழை நீர் வடிய உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் .

நிவர் புயலால் சேலம் மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது .

இதுபோன்று சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள கன்னங்குறிச்சி மற்றும் இதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இரவு பலத்த காற்றும் வீசியது.

நிவர் புயலால் வியாழக்கிழமை சேலம் அஸ்தம்பட்டியில் குடைகளை பிடித்த படி பல்வேறு பணிக்காக வியாழக்கிழமை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

இதையடுத்து கன்னங்குறிச்சி அருகிலுள்ள புது ஏரி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து கீழே விழுந்தது .

சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் காற்றினால் சரிந்து விழுந்துள்ளது.

நிவர் புயலால் வியாழக்கிழமை சேலம் ஏற்காடு செல்லும் சாலையை சாரல் மழையில் மூடி மறைத்துள்ள மேகங்கள்.

காற்றில் விழுந்துள்ள நெற்பயிர்கள் பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம்: வே.சக்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT