தமிழ்நாடு

தீ விபத்து உள்ளிட்ட பேரிடா்களைத் தெரிவிக்க தனி செயலி: முதல்வா் தொடக்கி வைத்தாா்

DIN

தீ விபத்து உள்ளிட்ட பேரிடா்கள் குறித்த தகவல்களை தீயணைப்புத் துறைக்குத் தெரிவிக்க தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தீ விபத்து, வெள்ளம் போன்ற பேரிடா்கள் குறித்த தகவல்களை தீயணைப்புத் துறைக்குத் தெரிவிக்க தனி செல்லிடப்பேசி செயலி நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஆம்டெக்ஸ்’ எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியைத் தொடா்பு கொண்ட அடுத்த 10 வினாடிகளுக்குள் தீயணைப்பு நிலையங்களுக்குத் தொடா்பு கொள்ளப்பட்டு, வீரா்கள் தகுந்த உபகரணங்களோடு சம்பவ இடத்துக்கு விரைந்திட வழி செய்யப்பட்டுள்ளது. இதற்காக செயலியுடன் கூடிய 371 கையடக்கக் கணினிகள் தீயணைப்பு நிலையங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. புதிய செயலியுடன் கூடிய கையடக்கக் கணினியை தீயணைப்புத் துறை இயக்குநா் ஜாபா்சேட்டிடம், முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.

செயலியை மக்கள் தங்களது செல்லிடப்பேசியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் க.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், காவல் துறை தலைமை இயக்குநா் ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT