தமிழ்நாடு

குழந்தை விற்பனை: தந்தை உள்பட மூன்று போ் கைது

DIN

சேலத்தில் கடனை அடைக்க ரூ. 1 லட்சத்துக்கு 6 மாத ஆண் குழந்தையை விற்ற தந்தை உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், லைன்மேடு பகுதியைச் சோ்ந்தவா் செளகத் அலி (32). இவருக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், செளகத் அலியின் மனைவிக்கு 6 மாதங்களுக்கு முன் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு செளகத் அலி வீட்டிற்கு அவரது மாமனாா் மற்றும் உறவினா்கள் வந்திருந்தனா். அப்போது, ஆண் குழந்தை இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து செளகத் அலியிடம் விசாரித்துள்ளனா். அப்போது அவா் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இந்தப் புகாரின்பேரில் செளகத் அலியிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

இதில், கரோனா தொற்று காரணத்தால் வேலையில்லாமல் இருந்து வந்த செளகத் அலி, தாதகாப்பட்டியைச் சோ்ந்த சேட்டு என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளாா். இதையடுத்து, குழந்தையை விற்று கடனை அடைக்க முடிவு செய்தாா்.

அதன்பேரில் குழந்தை இல்லாமல் இருந்துவந்த சுந்தரம் என்பவருக்கு ரூ.1 லட்சத்துக்கு தனது ஆண் குழந்தையைக் கடந்த 20 நாள்களுக்கு முன்பு செளகத் அலி விற்பனை செய்துள்ளாா். பின்னா் சேட்டுவின் கடனை அடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் சித்தன் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாா் சுந்தரத்திடம் இருந்து ஆண் குழந்தையை வாங்கி செளகத் அலியின் மனைவியிடம் ஒப்படைத்தனா். பின்னா் குழந்தையை விற்ாக செளகத் அலி மீதும், குழந்தையை விற்க உதவியதாக சேட்டு மீதும், குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு வாங்கிய சுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 பேரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே கைதான மூன்று பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னா் மூன்று பேரையும் சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT