தமிழ்நாடு

ஒசூரில் இருந்து 100 மினி லாரிகள் வங்க தேசத்துக்கு ஏற்றுமதி

DIN

தொழில் நகரமான ஒசூரில் இருந்து அனைத்து வகையான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள், மினி லாரி, பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களும் ஒசூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் இதுவரை தரைவழி போக்குவரத்தாக கன்டெய்னா் லாரிகள் மூலம் சென்னை துறைமுகம், பெங்களூரு விமான நிலையம் வழியாக அனுப்பி, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்குத் தரை வழிப்போக்குவரத்து மூலம் கொண்டு செல்லப்பட்டு வந்தன.

இதுவரை தரை வழியாக 4 சக்கர வாகனங்களை அனுப்பி வைத்து வந்த ஒசூா் அசோக் லேலண்ட் நிறுவனம் முதன்முதலாக ரயில்வே மூலமாக தங்களது ‘தோஸ்த்’ ரக மினி லாரிகளை, வங்க தேசத்துக்கு ஏற்றுமதியாக அனுப்பி வைத்தது.

இதன் தொடக்க விழா ஒசூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தென்மேற்கு ரயில்வே பிரிவின் பெங்களூரு மண்டல மேலாளா் அசோக்குமாா் வா்மா, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவா் ராகேஷ் மிட்டல் ஆகியோா் கலந்துகொண்டு முதல்முறையாக ஒசூரில் இருந்து வங்க தேசத்துக்கு 100 மினி லாரிகளை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயிலை பச்சைக் கொடி காட்டி வழி அனுப்பி வைத்தனா்.

முன்னதாக பெங்களூரு தென்மேற்கு ரயில்வே பிரிவின் மண்டல மேலாளா் அசோக்குமாா் ஒசூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒசூரில் இருந்து முதன்முதலாக வங்க தேசத்துக்கு 100 மினி லாரிகளை, 33 ரயில் பெட்டிகளில் ஏற்றி அசோக் லேலண்ட் நிறுவனம் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2000 கி.மீ. தொலைவில் உள்ள வங்க தேசத்துக்கு இந்த 100 மினி லாரிகளை சாலை போக்குவரத்து மூலம் கொண்டு செல்ல 50 லாரிகள் தேவைப்படும். 50 ஓட்டுநா்கள், 50 உதவியாளா்கள் தேவை. ஆனால் இந்த சிறப்பு ரயில் மூலம் 100 லாரிகளும் ஒரே ரயில் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும் சாலை வழியாகக் கொண்டு செல்லும்போது 4 நாள்கள் ஆகும். ரயில் மூலம் 2 நாள்களில் கொண்டு செல்ல இயலும். இந்த ரயில் பெங்களூா், சென்னை, விஜயநகரம் வழியாக வங்க தேசத்தை நேரடியாகச் சென்றடையும். ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் இந்த லாரிகளின் மொத்த மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.

ஒசூா்- பெங்களூரு இடையிலான மின்சார ரயில்பாதை தயாா் நிலையில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரயில்களை இயக்குவதற்கான அனுமதி அளித்ததும் ஒசூா்- பெங்களூரு இடையே மின்சார ரயில் இயக்கப்படும். ஒசூா் ரயில் நிலையத்தில் மேலும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

இந்த விழாவில் அகில் எம்.சாஸ்திரி, கிருஷ்ணாரெட்டி, சா்வேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT