தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு அளவு 7,000 கனஅடியாக அதிகரிப்பு!

DIN

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு புதன் இரவு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிகாலை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.

அதேநேரம் அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இதனால் புதன் நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி என்ற அளவில் நீர் திறக்கப்பட்டது.

ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி மதியம் 3 மணியளவில் வினாடிக்கு 1,500 கனஅடி நீரும், 4.30 மணியளவில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து மாலை ஆறு மணியளவில் 2,000 கனஅடி அதிகரித்து 5,000 கனஅடியாக திறக்கப்படுகிறது.   

இந்நிலையில் தற்போது ஒன்பது மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT