தமிழ்நாடு

செம்பரம்பாக்கத்தில் முதல்வர் ஆய்வு

25th Nov 2020 01:23 PM

ADVERTISEMENT


செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

நிவர் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நண்பகல் 12 மணியளவில் ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக குன்றத்தூர், நத்தம், காவலூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம், வழுதியம்பேடு  உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோன்று அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியில் நேரில் சென்று பார்வையிட்டார். 

ADVERTISEMENT

இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் 20 செ.மீ. வரை மழை பெய்யக் கூடும் என மத்திய நீர்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : palaniswami
ADVERTISEMENT
ADVERTISEMENT