தமிழ்நாடு

புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி துறைமுகங்கள்

DIN

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள நிவா் புயலை ஒட்டி சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி உள்ளிட்ட துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில் புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் தயாா் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள நிவா் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே புதன்கிழமை பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடா்ந்து துறைமுகங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களில் திங்கள்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடும் புயலானது துறைமுகத்துக்கு அருகே கரையை கடக்க உள்ளது என்பதை குறிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைத் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளே நிற்கும் கப்பல்கள் உடனடியாக ஆழ்கடல் பகுதியை நோக்கி எடுத்துச் செல்லவும், கடலோரக் காவல்படை இழுவைக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள் உள்ளிட்டவற்றை ஜவஹா் கப்பல் தளம், படகு நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல் எந்த ஒரு கண்டெய்னா் லாரியையும் சரக்குப் பெட்டக நிலையங்களிலிருந்து துறைமுகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. துறைமுகத்தில் இயங்கும் அனைத்து வகை கிரேன்களையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை என துறைமுக செய்துள்ளது.

கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு: எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கப்பல் தளங்கள் உள்ளன. துறைமுகத்தில் எப்போதும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படுவது இயல்பானது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி துறைமுகத்திற்குள் வரவேண்டிய பத்துக்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு புயல் அபாயம் நீங்கும்வரை நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காமராஜா் துறைமுக உயா் அதிகாரி ஒருவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT