தமிழ்நாடு

நிவர் புயல்: விழுப்புரத்தில் இலங்கை அகதிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

25th Nov 2020 04:06 PM

ADVERTISEMENT

நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கோட்டக்குப்பத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர்கள் அனைவரும் அணிச்சங்குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தற்காலிக முகாமை விழுப்புரம் மாவட்ட புயல் பாதுகாப்பு சிறப்பு காவல் அதிகாரி டிஐஜி சத்தியப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருள்கள் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT