தமிழ்நாடு

திருமுல்லைவாசலில் திடீர் கடலரிப்பு: மீனவ கிராம மக்கள் அச்சம்

DIN

திருமுல்லைவாசலில் திடீர் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் உள்ள கடலில் உப்பனாறு சென்று கலக்கும் முகத்துவாரம் அமைந்துள்ளது.

நிவர் புயல் காரணமாக அதிக சீற்றத்துடன் காணப்படும் திருமுல்லைவாசல் கடல், முகத்துவாரம் வழியாக கடல் நீர் உள்ளே புகுந்து மண்ணரிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிக கடல் சீற்றத்தால் பெருமளவில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் மீனவக் கிராமத்திற்கு புகும் நிலை ஏற்படும் அச்சத்தில் உள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மீனவர்கள் மணல் மூட்டைகள் மற்றும் சவுக்குகளை கொண்டு கடல் அரிப்பை தற்காலிகமாக சீரமைத்து வைத்துள்ளனர். முகத்துவாரத்தில் கருங்கற்கள் கொட்டி அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு முறையாக அமைக்கப்படாததால் இவ்வாறு முகத்துவாரம் வழியாக தண்ணீர் புகுந்து கடல் அரிப்பு ஏற்படுவதாகவும் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT