தமிழ்நாடு

அதிதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர்

25th Nov 2020 04:52 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.

தென்மேற்கு வங்கக் கடலில், கடலூரிலிருந்து 90 கி.மீ. தொலைவில் நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதுவரை மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த தீவிர நிவர் புயலானது, தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு அருகே இன்று இரவு அதிதீவிர புயல் நிவர் கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும், சில வேளையில் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT