தமிழ்நாடு

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் ஆய்வு; மக்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

25th Nov 2020 01:36 PM

ADVERTISEMENT

கனமழை பெய்து வரும் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்து தேவையான உணவுப்பொருள்களை வழங்கி வருகிறார். 

நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தின் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயலால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறார். 

கொளத்தூர், திருவிக நகர், வில்லிவாக்கம், ஐசிஎப், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்து உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார். 

ADVERTISEMENT

Tags : MK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT