தமிழ்நாடு

பெரியகுளம் தனியார் பெண்கள் கல்லூரியில் சுருள்பாசி வளர்ப்பு ஆய்வு

DIN

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் மருத்துவ குணமுள்ள சுருள்பாசி வளர்ப்ப்பு ஆய்வுகள் துவக்க விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் எஸ்.சேசுராணி தலைமை வகித்து, சுருள் பாசி ஆய்வினை துவக்கி வைத்தார். கல்லூரி செயலாளர் பி.ஜே.குயின்சிலிஜெயந்தி முன்னிலை வகித்தார்.

விழாவில் கல்லூரி வளாகத்தில் தற்காலிக தொட்டி அமைக்கப்பட்டு அதில் பாசி விதைகள் தூவப்பட்டது. இந்த பாசிகளின் மூலம் நச்சுத்தன்மையை நீக்கும் வழிமுறைகள், சத்து பற்றாக்குறை மற்றும் உணவுத்தேவைக்கு பயன்படுத்துவது குறித்து தொடர் ஆய்வுப்பணிகள் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை விலங்கியல் துறை துணைப் பேராசிரியர் இருதய கலைச்செல்வம் மற்றும் விலங்கியல் துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT