தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

DIN

தமிழகம் - புதுச்சேரி இடையே நிவர் புயல் இன்று மாலை தொடங்கி அதிகாலை, அதிவேகத்தில் கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி புதுவை எல்லைப் பகுதியான கோட்டக்குப்பம் வரை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நான்கு குழுக்களாக திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதியில் வந்து 85 பேர் முகாமிட்டுள்ளனர். இதேபோல் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

இப்பணிகளை விழுப்புரம் மாவட்ட புயல் கண்காணிப்பு அதிகாரி கூடுதல் தலைமைச் செயலாளரான ஹர்மந்தர் சிங் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோட்டகுப்பம் பகுதியில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தங்கும் இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எத்தனை குழுவினர் எந்தெந்த இடங்களில் தயார் நிலையில் உள்ளனர் என்பதை உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்து மீட்புப் பணிகளுக்குத் தயாராக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதேபோல் மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், திண்டிவனம், மரக்காணம், வானூர் பகுதிகளிலுள்ள புயல் பாதுகாப்பு மையங்கள், மீட்புக் குழுவினர் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டார்.

சென்னை - புதுவை கிழக்கு கடற்கரை சாலை மூடல்

தமிழக கடலோரப் பகுதியில் உள்ள சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை புயல் முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை பிற்பகல் மூடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை செல்லும் சாலை ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுச்சேரி எல்லையில் கோட்டக்குப்பம் பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டது. ஏற்படுத்தப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT