தமிழ்நாடு

தொழில் வணிகத் துறை - இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி இடையே ஒப்பந்தம்

25th Nov 2020 11:11 AM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் 24.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் திரள் வளர்ச்சி நிதியை (எஸ்சிடிஎப்) பயன்படுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்திடும் வகையில், தொழில் வணிகத் துறைக்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாட்டில் சுமார் 22.69 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், 2 கோடியே 57 லட்சம் ரூபாய் முதலீட்டில் சுமார் 1.45 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. 

அரசின் செயல்திறன் மற்றும் தொலைநோக்கு கொள்கைகளின் காரணமாக, தானியங்கி வாகனம் மற்றும் உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் மற்றும் தோல் பொருட்கள், இயயதிரங்கள், கணினி மற்றும் மின்னணு சாதனங்கள், பொறியியல் பொருட்கள், இரசாயனம், ரப்பர், பிளாஸ்டிக், உணவு பதப்படுத்துதல் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்ற பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தேசிய அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.70% மற்றும் ஏற்றுமதியில் 49.66% பங்கு அளிக்கின்றன.

ADVERTISEMENT

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், தொழில் வணிகத் துறைக்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கும் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தக்க சூழலை உருவாக்கும் வகையில் மூன்றாண்டு காலத்திற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டினை உள்ளடக்கியதாகும். மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், நிதியுதவி தேவைப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதியளிக்க எஸ்ஐடிபிஐ திரள் வளர்ச்சி நிதியைப் பயன்படுத்திட இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி உதவும். இதன்மூலம் மாநிலம் முழுவதும் குறு நிதி வழங்கிடவும், மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்திடவும் இயலும். 

அத்துடன், இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்ப பரிமாற்றம், புதுமைகளை மேம்படுத்துதல், அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை உலகளாவிய விநியோகச் சங்கிலியில், போட்டியிடத்தக்க வகையில், குறைந்த உற்பத்தி செலவில் தரம் உயர்த்தப்பட்ட புதுமையான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும்.

தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு உதவும் பொருட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அனுமதிகளை ஒற்றை சாளர முறையில் வழங்குவது, மானியம் மற்றும் சலுகைகளை எளிதாக பெறுவது மற்றும் தொழில் கூட்டுறவு சங்கங்களின் பதிவு ஆகிய சேவைகளை எளிதாக வழங்குவது போன்ற சேவைகளுக்காக சென்னை, கிண்டியில் இயங்கி வரும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகத்தின் கீழ் செயல்படும், சென்னை - கிண்டி, தொழில் வணிகத்துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கோயம்புத்தூர் - மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் அலுவலகம் மற்றும் மதுரை - மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஊரகத் தொழில் துறை அமைச்சர்  பா. பென்ஜமின், காண்பித்து வாழ்த்து பெற்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT