தமிழ்நாடு

நிவர் புயல்: 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தகவல்

DIN

சென்னை: மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிகாலை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது  மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போது மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், கரையை நெருங்கும்போது மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT