தமிழ்நாடு

கொரட்டூர் ஏரியின் முகத்துவாரம் திறந்துவிடப்பட்டது (விடியோ)

DIN


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தீவிர புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. சென்னையின் முக்கிய நகர்ப் பகுதிகளில் தரைதளத்தில் இருந்த பல வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பல முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையை அடுத்த கொரட்டூரில் உள்ள ஏரியின் முகத்துவாரத்தை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு திறந்துவிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொரட்டூர், பட்டரவாக்கம், அம்பத்தூர் பகுதிகளிலும், ஆவின் பால் பண்ணை பகுதிகளிலும் பெய்யும் மழை நீர் கொரட்டூர் ஏரிக்குச் செல்ல வழிவகைக் காணப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னை புரசைவாக்கத்தில் 148.20 மி.மீ. மழையும், சோழிங்கநல்லூரில் 145 மி.மீ. மழையும், கிண்டியில் 143.20 மி.மீ. மழையும், மயிலாப்பூரில் 140.60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக 1,402.90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 127.53 மி.மீ. ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT