தமிழ்நாடு

நிவர் புயல்: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!

25th Nov 2020 09:30 PM

ADVERTISEMENT

 

சென்னை: நிவர் புயலின் காரணமாக சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளில் உதவுவதற்கான தொடர்பு எண்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிகாலை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.

அதேநேரம் அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசுதல் ஆகியவற்றின் காரணமாக சாலைகளில் நீர் தேங்குதல் மற்றும் மரம் விழுந்து விபத்து ஆகியவை ஏற்படுகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளில் உதவுவதற்கான தொடர்பு எண்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தொடர்பாக 94981 86868, 94443 22210 மற்றும் 99625 32321 ஆகிய எண்களை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT