தமிழ்நாடு

சென்னை: இன்று இயக்கப்படவிருந்த 5 சிறப்பு ரயில்கள் ரத்து

25th Nov 2020 05:58 PM

ADVERTISEMENT


சென்னையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படவிருந்த 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

நிவர் புயல் இன்று இரவு, நாளை காலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கிறது. இதனால், காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, மங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே நாளை இயக்கப்படவிருந்த 27 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT