தமிழ்நாடு

கனமழை: சென்னையில் 38 மரங்கள் விழுந்தன

25th Nov 2020 03:59 PM

ADVERTISEMENT


சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 38 மரங்கள் விழுந்துள்ளன.

நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்று (24.11.2020) முதல் இன்று (25.11.2020) வரை 38 மரங்கள் விழுந்துள்ளன.

இதுபற்றி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சென்னையில் பெருமழை காரணமாக நேற்று (24.11.2020) முதல் இன்று (25.11.2020) காலை 08.00 மணி வரையில் வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், அசோக்நகர், பெரவள்ளூர், எழும்பூர், அபிராமபுரம், யானைகவுனி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, வளசரவாக்கம், கொரட்டூர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, மயிலாப்பூர், வேப்பேரி, அரும்பாக்கம் உட்பட 26 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் விழுந்த 38 மரங்களை சென்னை பெருநகர காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அப்புறப்படுத்தினர். மரங்கள் விழுந்ததில் 4 இலகு ரக வாகனங்கள் சேதமடைந்துள்ளன."

 

ADVERTISEMENT

Tags : Nivar
ADVERTISEMENT
ADVERTISEMENT