தமிழ்நாடு

அம்மணம்பாக்கம் ஏரி அருகே தாழ்வான பகுதியில் இருந்த 120 பேர் முகாமுக்கு மாற்றம்

DIN

ஸ்ரீபெரும்புதூர்: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மணம்பாக்கம் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 120 பேரை வருவாய்த்துறையினர் மீட்டு படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கவைத்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் பகுதியில் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 120 பேரை நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை வட்டாட்சியர் ஜெயகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மீட்டு படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, உடை, பாய், பெட்ஷீட் மற்றும் கொசுவலைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அப்பகுதியில் மருத்துவ முகாமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்து பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

SCROLL FOR NEXT