தமிழ்நாடு

மீட்புப் பணி: 9 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

25th Nov 2020 02:57 AM

ADVERTISEMENT

நிவர் புயல் கண்காணிப்பு, மீட்புப் பணிக்காக 9 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல் துறையின் சட்டம் -ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
 காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. டி.எஸ், அன்பு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரயில்வே காவல் துறை ஐ.ஜி. வி.வனிதா, விழுப்புரம் மாவட்டத்துக்கு பயிற்சிப் பிரிவு டிஐஜி எம்.சத்ய பிரியா, கடலூர் மாவட்டத்துக்கு வடக்கு சரக ஐ.ஜி. பி. நாகராஜன், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு பயிற்சிப் பிரிவு ஐ.ஜி. எம்.சி.சாரங்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஐஜி ஆர்.லலிதாலட்சுமி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தலைமையிட டிஐஜி பி.கே.செந்தில்குமாரி, திருவாரூர் மாவட்டத்துக்கு ஆயுதப்படை ஐ.ஜி. ஆர்.தமிழ்சந்திரன், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு மத்திய சரக ஐ.ஜி. எச்.எம். ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி ஏ.கே.விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்; இந்தக் கண்காணிப்பு - மீட்புக் குழுவை ஏ.கே.விசுவநாதன் தலைமை ஏற்று வழிநடத்துவார் எனவும் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
 காவல் கட்டுப்பாட்டு அறை: நிவர் புயலுக்கான காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையை 044 2434 3662, 044 2433 1074 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT