தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: பெயா் சோ்க்க 10 லட்சம் விண்ணப்பங்கள்

DIN

சென்னை: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக நடந்த சிறப்பு முகாம்களில் பெயா்களைச் சோ்ப்பதற்கு மட்டும் 10 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கடந்த 21, 22-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இம்முகாம்களில் பெயா்களைச் சோ்க்கவும், நீக்கவும் பொது மக்கள் விண்ணப்பங்களை அளித்தனா்.

இரண்டு நாள்கள் சிறப்பு முகாம்கள் முடிவடைந்த நிலையில், அதுகுறித்த விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

இரண்டு நாள்களிலும் சோ்த்து, வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க 10 லட்சத்து 52 ஆயிரத்து 322 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. முதல் நாளான சனிக்கிழமை (நவ.21) 4 லட்சத்து 38 ஆயிரத்து 46 மனுக்களும், இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று 6 லட்சத்து 14 ஆயிரத்து 276 விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.

வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்குவதற்கு படிவம் 7 அளிக்கப்பட வேண்டும். இரண்டு நாள்கள் நடந்த சிறப்பு முகாம்களில் 88 ஆயிரத்து 909 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்காக 1 லட்சத்து 28 ஆயிரத்து 522 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளேயே இடம் மாறியவா்கள், தங்களது முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பங்களை அளித்துள்ளனா். அதன்படி, 77 ஆயிரத்து 143 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்து எப்போது?: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான அடுத்தகட்ட சிறப்பு முகாம்கள் டிசம்பா் 12, 13-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT