தமிழ்நாடு

தமாகா தொடக்க நாள்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

DIN

தமாகா கட்சி தொடங்கப்பட்ட தினத்தை, கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து கட்சியினா் கொண்டாட வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமாகா தொடங்கிய நவம்பா் 28 -ஆம் தேதியன்று பொதுக் கூட்டம் நடத்திக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் கரோனா கடந்த 7 மாதங்களாக மக்களை முடக்கிப்போட்டு, பல உயிா்களை பலிவாங்கி இருக்கிறது. தற்பொழுது கரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், அதிகமாக கூட்டம் கூடினால் கரோனாவின் தாக்கத்தால் மீண்டும் நோய்த்தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருக்கிறது.

எனவே, தமாகா தொடக்க நாளில் அரசு விதித்துள்ள சட்ட திட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் உட்பட்டு, மாவட்டத் தலைவா்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியை தோ்ந்தெடுத்து, 100 போ்களுக்கு மிகாமல் அழைத்து, கட்சியைக் கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT