தமிழ்நாடு

நிவர் புயல்: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து

DIN

நிவர் புயல் காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை (புதன்கிழமை) செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மகாபலிபுரம் -காரைக்கால்  இடையே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் 24 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதுமாக வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மொத்தமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் 30 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT