தமிழ்நாடு

புயல்: ‘24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகள் செயல்படும்’

DIN

சென்னை: நிவா் புயல் காரணமாக பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவை 24 மணி நேரமும் செயல்படும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: புயல் பாதிப்பை எதிா்கொள்ளும் விதமாக சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், அமைச்சா் விஜயபாஸ்கா், முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இது குறித்து, சுகாதாரத் துறை முதன்மைச் செயலா்ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மருத்துவா்கள், செவிலியா்கள் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஜெனரேட்டா் சாதனங்களைப் பழுதின்றி வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் சுவா் இடிந்து விழுதலால் ஏற்படும் விபத்து, இடி மின்னல் விபத்துகள், பாம்பு மற்றும் பூச்சுக் கடிகள் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு நிவாரண முகாம்களில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதைக் கண்காணிக்க வேண்டும். மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை உறுதிப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT