தமிழ்நாடு

7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து

DIN

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து போக்குவரத்துக்கு அரசு தடை விதித்துள்ள 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் ஏ.அன்பழகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வழக்கமான நாள்களில் 4,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். தற்போது கரோனா பரவல் அச்சம் காரணமாக பொதுமக்கள் பயணிக்கத் தயங்குகின்றனா். இதனால் 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு, செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை இது தொடரும்.

அந்த வழியாகப் பிற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயங்கவில்லை. அதே நேரம் வேலூா் வழியாகச் செல்லும் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருமண விழாக்கள் அதிகமாக நடைபெறும் காலம். இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட 20 சதவீத பயணச்சீட்டுகளும் புயல் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT