தமிழ்நாடு

நிவர் புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

24th Nov 2020 09:34 PM

ADVERTISEMENT

நிவர் புயல் சென்னை அருகே கடக்கவுள்ளதால், சென்னை துறைமுகத்துக்கு 6ஆம் எண் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 
இதையடுத்து, சென்னை துறைமுகத்தில் இருந்த 4 சரக்கு கப்பல்கள், ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டன. கப்பல்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடலோர காவல் படை, கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பல்கள் துறைமுகத்தில் உள்ள ஜவகர் படகுத்துறையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. புயல் தீவிரத்தின் அடிப்படையில், துறைமுகங்களில் உள்ள கிரேன்களை மற்றும் இதர சாதனங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரேன்கள் எல்லாம் துறைமுகத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 
கண்டெய்னர் லாரிகளை 18.00 மணிக்கு மேல் அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. துறைமுகத்துக்கு வெளியே நிற்கும் வாகனங்கள் உள்ளே வந்தவுடன், துறைமுகத்தின் கதவு மூடப்படும் என சென்னை துறைமுக கழகத்தின் தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT