தமிழ்நாடு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை இயங்கும்

24th Nov 2020 08:19 PM

ADVERTISEMENT


விடுமுறை தின அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை நாளை (புதன்கிழமை) இயங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நாளை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

"விடுமுறை தின அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை இயங்கும். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்."

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT