தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் மகனுக்கு அரசுப் பணி

DIN


ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்த அந்தோணி செல்வராஜின் மகன் அ.அஜய் ஜோன்ஸ்க்கு கருணை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் அண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழக முதல்வர் உத்திரவிட்டப்படி, வழங்கப்பட்டுவிட்டது. 

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் ஆணையிட்டிருந்தார். அதன்படி, தமிழக முதல்வர் மொத்தம் 18 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜ்  மகன் அஜய் ஜோன்ஸ், அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயதினை தற்போது எய்தியதால், அவருக்கு இன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளராக பணி புரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கி ஆறுதல் கூறினார்.

முதல்வரிடமிருந்து பணிநியமன ஆணையினை பெற்றுக் கொண்ட அஜய் ஜோன்ஸ், தனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதியுதவியும், அரசு பணிக்கான பணிநியமன ஆணையும் வழங்கியமைக்காக முதல்வருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இதன்மூலம், தமிழக முதல்வர் பழனிசாமியின் உத்தரவுப்படி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுவிட்டது.

இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் க.சண்முகம்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT