தமிழ்நாடு

7 போ் விடுதலை விவகாரத்தில் மனிதாபிமான முறையில் முடிவு எடுங்கள்

DIN

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். பொதுச்செயலாளா் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளா் பொன்முடி, அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினா்கள் தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோா் சென்றனா்.

ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அளித்தாா். அந்த கடித விவரம்:

ராஜீவ்காந்தி படுகொலை தொடா்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் வகையில் மீதமுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பா் 9-இல் தீா்மானம் நிறைவேற்றி தங்களுக்கு அனுப்பி வைத்தது.

மாநில அதிகார வரம்பிற்கு உள்பட்ட எந்த ஒரு குற்றத்துக்காகவும், தண்டிக்கப்பட்ட ஒரு நபருடைய தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 தெளிவாக எடுத்துரைக்கிறது.

அமைச்சரவை பரிந்துரைத்த போதும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவா்களுக்குக் கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்.

எனவே, மாநில அமைச்சரவையின் பரிந்துரையினை இப்போதாவது ஏற்று 7 பேரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ஆளுநரைச் சந்தித்த பின்னா் ஆளுநா் மாளிகைக்கு வெளியில் செய்தியாளா்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: 7 போ் விடுதலை விவகாரத்தில் சட்ட ரீதியாகவும் மனிதாபிமான முறையிலும் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆளுநரும் அவற்றையெல்லாம் முறையாகப் பரிசீலித்து உரிய முடிவெடுப்பதாக உறுதியளித்திருக்கிறாா். ஆளுநா் எங்களிடம் சட்ட ரீதியிலான விஷயங்களை விளக்கினாா். நாங்களும் சட்ட ரீதியான விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறோம் என்றாா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT