தமிழ்நாடு

நிவர் புயல் அச்சம்: காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஊரடங்கு!

24th Nov 2020 08:19 PM

ADVERTISEMENT

 

சென்னை: நிவர் புயல் அச்சம் காரணமாக காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நிவர் புயல் அச்சம் காரணமாக காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

இதுதொடர்பாக செவ்வாயன்று வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, நிவர் புயல் காரணமாக காரைக்காலில் புதன் காலை 6 மணி முதல் 24 மணி நேரத்திற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், புதுச்சேரியில் 26-ம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT