தமிழ்நாடு

புதுச்சேரியில் இரு தினங்களுக்கு பேருந்து சேவை ரத்து

24th Nov 2020 01:26 PM

ADVERTISEMENT

நிவர் புயல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் இரு நாள்களுக்கு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் இருந்து வியாழக்கிழமை வரை பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தகவல் தெரிவித்துள்ளார். 

நாளை பிற்பகல் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நிவர் புயல் கரையைக் கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் இன்று முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : nivar cyclone Puducherry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT