தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் புயல் எச்சரிக்கை

DIN

விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகுகளைக் கடற்கரையில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வங்க கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் புதன்கிழமை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் தொடங்கி கோட்டக்குப்பம் வரை 19 மீனவ கிராமங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து தங்களது படகுகளை கரைக்கும் கரையிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்று வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் கடற்கரை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை கரையோரம் வைத்துள்ள மீனவர்கள் அதற்குமேல் பாதுகாப்பான இடத்திற்கு டிராக்டர்கள் மூலம் கட்டி இழுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதேபோல் கோட்டகுப்பம் சந்திராயன் குப்பம் கடற்கரை பகுதிகளிலும் கரையில் நிறுத்தி வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை புயல் கரையைக் கடக்கும் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னதாகவே மழை மேக மூட்டத்துடன் கடல் சீற்றம் மரக்காணம் பகுதி நிலவுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வீட்டில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT