தமிழ்நாடு

நாகை துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

23rd Nov 2020 02:46 PM

ADVERTISEMENT

 

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் சனிக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலுக்கு  நிவர் என ஈரான் பெயரிட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் சென்னையில் தென்கிழக்கில் 740 கிலோமீட்டரில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் காரைக்காலுக்கும்-மாமல்லபுரத்துக்கும் இடையே நவ. 25-ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில் நாகை துறைமுக அலுவலகத்தில் உள்ளூர் முன்னறிவிப்பாக திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு 3-ஆம் எண்  புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Nagai Port
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT