தமிழ்நாடு

ஆப்பக்கூடலில் நிலக்கரி சாம்பல் கழிவு வெப்பத்தால் கருகும் கால்கள்: நிவாரணம் கோரும் மக்கள்

23rd Nov 2020 05:45 PM

ADVERTISEMENT

 

ஆப்பக்கூடல் தனியார் சர்க்கரை ஆலை நிலக்கரி சாம்பல் கழிவுகளின் வெப்பத்தால் கால்கள் கருகிய பொதுமக்கள், சிகிச்சையும் நிவாரணமும் வழங்கக்கோரி மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் தலைமையில், கால்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், பவானி, அந்தியூர் வட்டாரத்திலுள்ள வேம்பத்தி, ஆப்பக்கூடல், ஒரிச்சேரி, புன்னம் ஊராட்சி பகுதிகளில் ஆப்பக்கூடல்  தனியார் சர்க்கரை ஆலையின் கொதிகலனில் பயன்படுத்திய நிலக்கரி சாம்பல் பல ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ளது. இந்த சாம்பலின் அடிப்பகுதியில் கடும் வெப்பம் உள்ளது. ஆனால், மேல்பகுதியில் புற்களும், வேலி கருவேல மரங்களும் வளர்ந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி எதுவும் இல்லாததால் கிராமப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆடு, மாடு மேய்க்கவும், விறகு எடுக்கவும் அந்த சாம்பல் பகுதிக்கு சென்றஉ வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதில், அவர்கள் கால்கள் சாம்பலில் புதைந்து வெந்து, தோலுரிந்து, புண்ணாகி, மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை எடுத்தும் குணமாகாத நிலை உள்ளது. மேலும், கால் விரல்கள், பாதங்கள் வெளுத்து எரிச்சலோடு நடக்க முடியாமலும் மேல் சிகிச்சை பெற முடியாமலும் ஆண்களும், பெண்களும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதனால், சாம்பல் ஆலை நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இன்னும் பல பகுதிகளில் சாம்பலின் ஒரு பகுதி அப்படியே உள்ளது. திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் நேரில் பார்வையிட்டபோது, பாதிக்கப்பட்ட மக்கள் சந்தித்து உடனடி சிகிச்சையும், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி எடுத்துக் கூறினர். 

எனவே, நிலங்களைக் ஒட்டப்பட்டுள்ள நிலக்கரி சாம்பலை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சையும் தக்க நிவாரணம் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT