தமிழ்நாடு

வெள்ளக்கோவிலில் யானையை வைத்து பிச்சை எடுப்பு

23rd Nov 2020 04:49 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை யானையை வைத்து பிச்சை எடுத்த பாகனைப் பொதுமக்கள் எச்சரித்தனர். 

வெள்ளக்கோவில் கடைவீதி, குடியிருப்புப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு ஒரு யானையை ஓட்டி வந்த பாகன், அதன் மீது அமர்ந்து கொண்டு, யானையை வைத்து பிச்சை எடுத்தார். பலருக்கு ஆசி வழங்கச் செய்தும், குழந்தைகளை யானை மீது ஏற்றி உட்கார வைத்தும் பணம் பெற்றார்.

பாகனிடம் விசாரித்த போது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது உள்பட எந்த விவரத்தையும் கூறவில்லை. பொது இடங்களில் யானையை வைத்து பிச்சை எடுப்பது குற்றம் எனத் தன்னார்வலர்கள் எச்சரித்து யானைக்கும், பாகனுக்கும் உணவு வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT