தமிழ்நாடு

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

23rd Nov 2020 02:39 PM

ADVERTISEMENT

 

காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தாமதம் செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி திங்கள்கிழமை  தீக்குளிக்க முயன்றார்.

மதுரையை அடுத்த கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவருக்கு மனைவி அனுஷா, 2 குழந்தைகள் உள்ளனர். தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கோபால்சாமி, பிரதான நுழைவாயில் அருகே உடலில் மண்ணெண்ணைய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இப்பகுதியிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கோபால்சாமிக்கும் அவரது சகோதரர் வெண்மணிக்கும் சொத்து தகராறு உள்ளது. கடந்த  சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தராறில் கோபால்சாமியை கத்தியால் வெண்மணி குத்தியுள்ளார். இதுகுறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கோபால்சாமி புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த கோபால்சாமி தீக்குளிக்க முயன்றது விசாரணையில். தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT