தமிழ்நாடு

தில்லி புறப்பட்டார் அமித் ஷா

22nd Nov 2020 10:51 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 2 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி புறப்பட்டார்.

தமிழகத்தில் ரூ.67 ஆயிரம்கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

நேற்று அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித் ஷா, ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ADVERTISEMENT

பின்னர் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும்  பாஜக உயர்மட்டக் குழுவினருடன் இரவு ஆலோசனை மேற்கொண்டார்.    

இந்தநிலையில் தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட அமித் ஷா, சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தில்லி புறப்பட்டார்.

Tags : amith sha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT