தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் கைது: வேதாரண்யத்தில் திமுகவினர் மறியல்

20th Nov 2020 06:14 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுதும் அரசியல் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்ட உதயநிதி ஸ்டாலின்  திருக்குவளையில் தனது பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டமிட்டார். திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா தொற்றைக் காரணம் காட்டி காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்திருந்தன.

ஆனால், திமுக தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதோடு, அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விடக் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டது. இதையடுத்து, அனுமதி மறுத்த காவல் துறையினர் உதயநிதியைக் கைது செய்தனர். இதனைக் கண்டித்து, வேதாரண்யம், கள்ளிமேடு, செம்போடை, தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT