தமிழ்நாடு

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்

20th Nov 2020 05:49 PM

ADVERTISEMENT

 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனை நடைபெற்றது. 

ADVERTISEMENT

விழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை மாலை கோவர்த்தனாம்பிகையிடம் சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரனை சுப்பிரமணிய சுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி சிவப்பு அலங்காரத்தில் கோயில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார். உடன் வீரபாகு தேவர் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. 

கோயில் உள் பிரகாரத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுவதால் மாலை 4 மணியிலிருந்து 6.30 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT