தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவியின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணத்தை ஏற்ற சங்ககிரி எம்.எல்.ஏ.

20th Nov 2020 02:41 PM

ADVERTISEMENT

சங்ககிரி: அரசு உள்இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்புக்கான ஆணை கிடைக்கப்பெற்ற சங்ககிரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவியின் ஐந்து ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா ஏற்றுக்கொண்டுள்ளார். 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அழகப்பம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவி எம்.லதா நீட் தேர்வில் வெற்றி பெற்று தற்போது தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5%  உள் இட ஒதுக்கீட்டீன்  கீழ் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில சேர்க்கைக்கான  உத்தரவு கிடைத்துள்ளது.

அதனையடுத்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்களுக்காக வியாழக்கிழமை சேலம் வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் அம்மாணவி அதற்கான உத்தரவினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.  இதனையடுத்து சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட அ.புதூர் அரசுப் பள்ளியிலிருந்து மருத்துவப் படிப்புக்கு செல்லும் மாணவிக்கு சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா ஐந்து வருடத்திற்கான கல்விக் கட்டணம் முழுவதையும் செலுத்துவதாக தெரிவித்து முதலாமாண்டிற்கான கல்வி கட்டணத்தை வியாழக்கிழமை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் சேவையை மாணவியின் பெற்றோர்கள், அ.புதூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : சங்ககிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT